தென்னாப்பிரிக்காவின் 27 ஆண்டு சாபம்! முடிவுக்கு கொண்டு வந்த கருப்பின வீரர்.. யார் இந்த டெம்பா பவுமா?
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணியின் சாபம் முடிவுக்கு வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 2021ஆம் ஆண்டு வரை முழு நேர கேப்டனாக கருப்பின வீரர்கள் இருந்ததே கிடையாது.
நிறவெறி
இவ்வளவு ஏன், இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்படவில்லை என்றால், கருப்பின வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா என்பதும் சந்தேகம் தான். கிரேம் ஸ்மித், டி வில்லியர்ஸ், பீட்டர்சன் உள்ளிட்ட பலரும் கூட இடஒதுக்கீடு முறையை எதிர்த்திருக்கிறார்கள். மகாயா நிடினி போன்ற வீரர்கள் களத்தில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், அவருடன் தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஒருநாளும் ஒன்றாக இணைந்து உணவு சாப்பிட்டதில்லை.

ஐசிசி கோப்பை
கருப்பின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்திய தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வரலாற்றில், முதல்முறையாக டெம்பா பவுமா முழு நேர கேப்டனாக 2021ல் நியமனம் செய்யப்படுகிறார். அதிலிருந்து 4 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர்கள் ஏங்கிய ஐசிசி கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார் டெம்பா பவுமா.
பவுமாவின் பள்ளி வாழ்க்கை
பள்ளி மாணவராக இருந்த போது டெம்பா பவுமா படித்த வகுப்பில் அவரின் ஆசிரியர், இங்கிருந்து 15 ஆண்டுகள்.. நீங்கள் வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் என்று எழுத கூறினார். அதற்கு பவுமா, இன்னும் 15 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவின் ஜெர்சி அணிந்து கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும். ஐசிசி கோப்பையை வென்று தென்னாப்பிரிக்கா பிரதமருடன் கைகுலுக்க வேண்டும் என்று எழுதி இருந்தார்.
கருப்பர் நகரம்
தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் நகருக்கு அருகில் லங்கா என்ற இடம் உள்ளது. நெல்சன் மண்டேலா ஆட்சிக்கு வந்த போதும் கூட தென்னாப்பிரிக்காவில் நிறவெறி உச்சத்திலேயே இருந்தது. அதனால் கேப் டவுனில் பணியாற்றும் கருப்பின மக்கள் இரவு நேரத்தில் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தங்கும் இடம் தான் லங்கா.
நிரந்தர இடமில்லை
அப்படி இடமின்றி கிடைத்த இடத்தில் பிறந்தவர் தான் டெம்பா பவுமா. 1990களில் பிறந்தது முதலே டெம்பா பவுமா கருப்பின மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பார்த்து வளர்ந்தவர். அதேபோல் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டில் நடக்கும் சர்ச்சைகளையும் அறிந்தே இருந்தார். இதனால் 2016ஆம் ஆண்டே பவுமா தென்னாப்பிரிக்கா அணிக்குள் வந்தாலும், அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
பழிசொன்ன ரசிகர்கள்
கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்து காட்டினார். தென்னாப்பிரிக்காவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசிய முதல் கருப்பின வீரர் பவுமா தான். அதன்பின் தென்னாப்பிரிக்கா அணியில் இடம் கிடைத்தாலும், எப்போது தோல்வி அடைந்தாலும் அது கருப்பின வீரர்கள் மீதே விழுந்தது. குறிப்பாக உயரம் குறைவாக இருக்கும் பவுமா மீது விழுந்தது.
அவமானங்கள்
ஆனால் சிறு வயதில் இருந்தே அவமானங்களை, ஏமாற்றங்களை சந்தித்து பழகி கொண்ட பவுமாவுக்கு, அது பெரிதாக காயத்தை கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், சில நேரங்களில் மீடியாக்களிலும் கூட அவமானப்படுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் பவுமாவின் மன வலிமையை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை.
கம்மின்ஸிடம் சவால்
அந்த மன வலிமையுடன் தான் கம்மின்ஸிடம் நேரடியாக கோப்பையில் கை வைக்கும் எண்ணம் இருந்தால் மறந்துவிடுங்கள்.. ஏனென்றால் உங்களுக்கு எதிராக நிற்பது தென்னாப்பிரிக்கா கிங் லார்ட் பவுமா என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று சவால்விட முடிந்தது. அதே மனவலிமையுடன் மைதானத்தில் 2 இன்னிங்ஸிலும் போராடி தென்னாப்பிரிக்காவின் சாபத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா சாபம்
அத்தனை வெள்ளையின கேப்டன்களால் செய்ய முடியாததை 4 ஆண்டுகளில் டெம்பா பவுமா செய்து முடித்துள்ளார். இதன் மூலமாக இத்தனை ஆண்டுகளாக கருப்பின வீரர்கள் கேப்டனாக நியமிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியையும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தை நோக்கி மக்களை கேள்வி எழுப்பவும் வைத்திருக்கிறார் பவுமா.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications