WTC பைனல்.. மழை குறுக்கிட வாய்ப்பு.. போட்டி பாதிக்கப்பட்டால் வெற்றி எப்படி.. ரூல்ஸ் சொல்வது என்ன?
லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. போட்டியில் மழை குறுக்கிடும் பட்சத்தில் விதிகள் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 469 ரன்கள் எடுத்தது அவுட் ஆனது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்கள் விளையாடி 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்களை எடுத்து இருந்த போது டிக்ளேர் செய்தது. இதன்படி, முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணிக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணையித்தது. போட்டியின் நான்காவது நாளான நேற்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்துள்ளது. 47வது ஓவர் முடிவில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 261 ரன்கள் தேவை உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகளே இருப்பதால் இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறுமா? அல்லது டிராவில் முடியுமா? அல்லது ஆஸ்திரேலியா வெற்றி வாகை சூடுமா என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிபார்ப்பாக உள்ளது. இதனிடையே, இன்றைய போட்டியின் குறுக்கே மழை வர வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும் போட்டிக்கான விதிகள் என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம். 5-வது நாள் ஆட்டம் முழுவதுமாக தடைபட்டால் ரிசர்வ் டே-யில் அதாவது நாளை இறுதி நாள் ஆட்டம் நடைபெறும். ஒருவேளை மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் என்ற அளவில் பாதிக்கப்பட்டால் அதற்கேற்ற அளவுக்கு இன்றைய நாள் ஆட்டம் நீட்டிக்கப்படும்.
அதேவேளையில் போட்டி மழையால் பலமுறை பாதிக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் நாளை ரிசர்வ் டேயில் போட்டி தொடரும். இன்று எத்தனை ஓவர்கள் வீசப்படவில்லையோ அது மட்டும் ரிசர்வ் டே-வில் வீசப்படும். ரிசர்வ் டேவிலும் போட்டியில் முடிவு கிடைக்காவிட்டாலோ, டிராவில் முடிந்தாலோ இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியும் கூட்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications