சுற்றி வளைத்த 5 பேர்.. கொஞ்சம் கூட கவலையில்லை.. அசாத்தியத்தை நிகழ்த்திய எம்பாப்பே.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பாஸ்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தி இருக்கிறது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை எம்பாப்பே வீணடித்தாலும், 60வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை அடித்து எம்பாப்பே மிரட்டி இருக்கிறார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. காலிறுதி சுற்றின் முதல் போட்டியில் வலிமை வாய்ந்த பிரான்ஸ் அணியை எதிர்த்து மொராக்கோ அணி களமிறங்கியது. மொராக்கோ அணியும் வலிமையான அணி என்றாலும், பிரான்ஸ் அதிரடியை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

Fifa word cup Lionel Messi

இருப்பினும் மொராக்கோ கோல்கீப்பர் மைக் மற்றும் பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பே இடையிலான மோதல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோல்கீப்பர் மைக் ஒரு அசாத்திய மேஜிக்கை நிகழ்த்தி காட்டி இருந்தார். இதனால் அரண் அமைத்து நிற்கும் மைக் கோட்டையை எம்பாப்பே எப்படி தகர்ப்பார் என்ற கேள்வி எழுந்தது.

அதற்கேற்ப 28வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது. அந்த பெனால்டியை எம்பாப்பே அடிக்க, மைக் எளிதாக கணித்து தடுத்து நிறுத்தினார். இதனால் பிரான்ஸ் அணி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஜெர்க் ஆகியது. முதல் பாதி முழுவதும் பிரான்ஸ் அணியை மொராக்கோ கோல் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தியது என்றே சொல்லலாம்.

பாக்ஸிற்கும் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே பந்தை எடுத்து வந்தாலே, அவரை சுற்றி 5 வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த டெட்லாக்கை உடைக்க முடியாமல் எம்பாப்பே தடுமாறினார் என்றே சொல்லலாம். ஆனால் 60வது நிமிடத்தில் எம்பாப்பேவை எந்த வீரராலும் தடுக்க முடியவில்லை. 5 பேர் சுற்றி வளைத்த போது, கவலையின்றி பந்தை கோல் போஸ்டிற்குள் அனுப்பினார்.

அதுவே மொராக்கோ அணிக்கு பேரிடியாக அமைந்தது. இதன்பின் 66வது நிமிடத்தில் எம்பாப்பே கொடுத்த அசிஸ்ட்டை பயன்படுத்தி நட்சத்திர வீரர் டெம்பெல் 2வது கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து 3வது முறையாக பிரான்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+