யாழ். மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஆஸி. தமிழ் பொறியிலாளர் அமைப்பினர் கல்வி நிதி உதவி
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஆஸ்திரேலியாவின் தமிழ் பொறியிலாளர் அமைப்பின் கல்வி நிதியை வழங்கி ஊக்குவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் உள்ள 'கருவி' என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இணைந்துள்ள மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

ஆஸ்திரேலிய தமிழ்ப் பொறியிலாளர் அமைப்பினர் மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் 10 பேருக்கு இக்கல்வி நிதி உதவியை வழங்கி வருகின்றனர். இந்நிகழ்வுக்கு கருவி அமைப்பின் தலைவர் தர்மசேகரம் தலைமை வகித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், 'கருவி' அமைப்பின் ஜசிந்தன், கனடாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் இதுபோன்ற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களது கல்விக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications
