இலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல்- ஈழத் தமிழர் பகுதியில் பயங்கர சேதம்!
யாழ்ப்பாணம்: இலங்கையில் பேயாட்டம் போட்டு கரையை கடந்த புரேவி புயல் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் புரேவி புயலால் இடம்பெயர்ந்துள்ளனர்.
Recommended Video
இலங்கையின் திருகோணமலை- பருத்தித்துறை இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு புரேவி புயல் கரையை கடந்தது. இலங்கையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைத்தீவை ஊடறுத்து புயல் கரையை கடந்துள்ளது.

இந்த புயல் தற்போது மன்னார்வளைகுடாவுக்குள் நுழைந்து பாம்பனை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புரேவி புயல் கரையை கடந்த போது மணிக்கு 80கி.மீ. முதல் 100 கி.மீ. வரை பலத்த சூறாவளி காற்று வீசியது.
இப்புயலால் இலங்கையின் பல பகுதிகளில் 20 செ.மீ மழை பதிவாகி இருக்கிறதாம். இந்த புரேவி புயல் முழுவதும் தமிழரின் தாயகப் பகுதிக்குள்தான் கரையை கடந்தது. இதனால் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னர், கிளிநோச்சி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் நேற்று முதலே பெரும் சேதங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன. எங்கு திரும்பினாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல கிராமங்களில் கடல்நீர் உள்ளே புகுந்துள்ளது. யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் இந்த புரேவி புயலால் மீண்டும் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டிய துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னமும் முழுமையான சேத விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications