இந்தியாவிலேயே தமிழில் தேசிய கீதம் பாடலை.. இங்க எதுக்கு? இலங்கை ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு!!
கொழும்பு: இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு ஆளும் சுதந்திர கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 1951-ம் ஆண்டில் இருந்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2010-ம் ஆண்டு ராஜபக்சே அரசு தடை விதித்தது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழிலும் தேசிய கீதத்தை பாட அதிபர் மைத்ரிபால சிறிசேன ஒப்புதல் அளித்தார்.

இந்த முடிவுக்கு ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் இலங்கை ராணுவத்தின் மூத்த கமாண்டராக பதவி வகித்தவருமான சரத் வீரசேகரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி, தேசிய கீதம் நாட்டின் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மைத்ரிபாலவின் இந்த முடிவு வெறும் 20 லட்சம் தமிழரர திருப்திபடுத்தும் செயலாகும். இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், அங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை என்றார்.
அதே நேரத்தில் தமிழில் தேசிய கீதம் பாடுவதை அனுமதிப்பதில் தவறில்லை என முன்னாள் மொழிகள் துறை அமைச்சர் வாசுதேவ நானயக்காராவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications