தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி காலமானார்!
கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி (வயது 43) புற்றுநோயால் காலமானார்.
கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த தமிழினி 1991ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவில் அரசியல்துறை பொறுப்பாளராக பதவி வகித்தார்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோருடன் தமிழினி இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். இலங்கை ராணுவ தடுப்புக் காவலில் இருந்து 2013ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார்.
இதன் பின்னர் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மஹரகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழினியின் உடலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. மாவை சேனாதிராசா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழினியின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications