மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 79ஆனது!
Subscribe to Oneindia Tamil
திருக்கேதீஸ்வரம்: மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் அருகே மனித புதைகுழி ஒன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த புதைகுழியில் தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இன்று மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் 29 வது முறையாக மனித புதைகுழி தோண்டர்ப்பட்டது. இதில் மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் மொத்த எண்ணிக்கை 79 ஆக அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications