For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் புதிய நாடாளுமன்றம் செப்.1-ல் கூடுகிறது

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: பரபரப்பான தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து இலங்கையின் புதிய நாடாளுமன்றம் செப்டம்பர் 1-ந் தேதி கூட இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 எம்.பி.க்கள் மக்கள் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எஞ்சிய 29 பேரும் நியமன எம்.பி.க்களாக, கட்சிகள் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது நடைமுறை.

196 எம்.பி. இடங்களுக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 21 அரசியல் கட்சிகளின் சார்பில் 6,151 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தன. இத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

First session of Srilanka Parliament to begin on Sep 1

தேர்தலில் பெற்ற இடங்கள்:

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி - 93

ராஜபக்சேவை முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 83

தமிழ் தேசிய கூட்டமைப்பு- 14

ஜே.வி.பி- 4

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 1

டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. - 1

வாக்கு சதவீத அடிப்படையில் நியமன எம்.பி.க்கள் விவரம்:

ரணில் ஐக்கிய தேசிய கட்சி: 13

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 12

தமிழ் தேசியக் கூட்டமைப்பு- 2

ஜே.வி.பி.- 2

நியமன எம்.பி.க்களுடன் நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம்:

ஐக்கிய தேசியக் கட்சி: 106

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 95

தமிழ் தேசியக் கூட்டமைப்பு: 16

ஜே.வி.பி. : 6

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் : 1

டக்ளஸின் ஈ.பி.டி.பி: 1

இலங்கையைப் பொறுத்தவரையில் புதிய அரசு அமைக்க 113 எம்.பி.க்கள் தேவை. தற்போது 106 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் ரணில் அணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பல எம்.பி.க்கள் தாவக் கூடும். இதனால் ரணில் தலைமையில் புதிய அரசு அமையும். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ந் தேதியன்று இலங்கையின் புதிய நாடாளுமன்றம் கூட உள்ளது.

English summary
After the elections the first Session of Srilanka Parliament will begin on Sep. 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X