விமான நிலையங்களை இந்தியாவிடம் கொடுப்பதா? இலங்கையில் போராட்டம்!
இலங்கை விமான நிலைய பராமரிப்பு பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் நடைபெற்றது.
கொழும்பு: இலங்கையில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஒன்றான அம்பாந்தோட்டை என்ற இடத்தில் இருக்கும் மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் இந்தியாவை நாடியுள்ளது அந்நாட்டு அரசு. பராமரிப்பு பணிகளை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்க்கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இன்று இலங்கைத் தலைநகர் கொழும்பில் போராட்டம் நடை பெற்றது.
இலங்கையில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் மாத்தளை விமான நிலையமும் ஒன்றாகும். தினமும் நிறைய பயணிகள் வந்து போகும் இந்த விமான நிலையத்தை பராமரிக்கும் பணியை அந்நாட்டு அரசு இந்திய நிறுவங்களிடம் அளிக்கலாம் என முடிவு எடுத்துள்ளது. மேலும் இந்த விமான நிலையத்தை தொடர்ந்து மேலும் சில விமான நிலையங்களையும் பராமரிக்க இந்தியாவையே நாடலாம் எனவும் முடிவு எடுத்துள்ளது.

இந்த விஷயம் அந்நாட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் மக்களும் , எதிர்க்கட்ச்சிகளும் இணைந்து இந்தத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்துள்ளனர். அதேபோல் இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள அம்பாந்தோட்டையிலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜ பக்சே தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டம் வலுவாகவே, போலீசார் தண்ணீரை பீய்ச்சு அடிக்கத் தொடங்கினர். இதையடுத்து போலீசுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
இதுவரை 26 பேர் இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தளை சர்வதேச விமான நிலையமானது ராஜ பக்சே ஆட்சியில் சீனாவின் பொருளாதார உதவியுடன் கட்டப்பட்டது. சீனா உதவியுடன் கட்டப்பட்ட விமான நிலையத்தை இந்தியா பராமரிப்பதா என அங்கு வலுவான எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications