ஜே.வி.பி.யின் மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஜனதா விமுக்தி பெரமுனா(ஜே.வி.பி) எனப்படும் சிங்கள இனவாத கட்சியின் மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்.
இலங்கை அரசுக்கு எதிராக 1971-ம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டது சிங்களர்களைக் கொண்ட ஜே.வி.பி. அப்போது இந்த இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர்களில் உயிர் தப்பியவர் சோமவன்ச அமரசிங்கே மட்டும்.

பின்னர் ஜே.வி.பி. அரசியல் கட்சியாக மாறியபோது 24 ஆண்டுகாலம் அக்கட்சியின் தலைவராக இருந்தார் சோமவன்ச. 2014-ம் ஆண்டு ஜேவிபி தலைவர் பதவியில் இருந்து விலகி புதிய கட்சியையும் தொடங்கினார்.
அண்மைக்காலமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை தீவிரமாக ஆதரித்து வந்தார். உடல்நலக் குறைவால் சோமவன்ச அமரசிங்கே நேற்று காலமானார்.












Click it and Unblock the Notifications