ஓ மை காட்.. குமார் சங்ககாரா டிவிட்டர் அக்கவுண்டில் ஆபாச படம் ரிலீஸ்
கொழும்பு: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாராவின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள் அதில் ஆபாச படத்தை போட்டுவிட்டனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் டிவிட்டர் அக்கவுண்ட் மீண்டும் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் உள்ள குமார் சங்ககாரா ரசிகர்களுக்கு நேற்று மாலை ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் சங்ககாரா டிவிட்டர் அக்கவுண்டில், திடீரென ஒரு படம் வெளியானது. அது ஒரு ஆணின் ஆபாச படம். முகம் காண்பிக்கப்படவில்லை என்றாலும், சங்ககாராதான் தனது நிர்வாண போட்டோவை போட்டுவிட்டாரோ என்று அதிர்ந்துவிட்டனர் ரசிகர்கள்.

இந்நிலையில்தான் தனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக சங்ககாரா தெரிவித்தார். இதன்பிறகே ரசிகர்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. ஹேக் செய்யப்பட்டமைக்காக டிவிட்டரில் சங்ககாரா மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ரசிகர்களும், அவரது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்காது என்றும், அது சங்ககாரா படம்தான் என்றும் அவரின் டிவிட்டர் அக்கவுண்டில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து சங்ககாரா டிவிட்டர் அக்கவுண்ட் பாதுகாக்கப்பட்ட அக்கவுண்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்போது யாராவது ஃபாலோ செய்ய வேண்டும் என்றால், ரிக்குவஸ்ட் கொடுத்து மறுமுனையில் ஓ.கே, வந்த பின்னரே ஃபாலோ செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications