"அய்யோ விடுதலைப் புலிகள்".. மீண்டும் அரசியலுக்கு வரும் மகிந்த ராஜபக்சே கையிலெடுக்கப் போகும் ஆயுதம்!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள்; இலங்கையின் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது ஆகிய கோஷங்களை முன்வைத்து மீண்டும் அரசியலுக்கு திரும்ப அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சே அரசியல் துறவறம் மேற்கொண்டதைப் போல முடங்கிக் கிடக்கிறார். அவரது மனைவி, சகோதரர்கள் உள்ளிட்ட பலரும் பல மோசடி புகார்களில் சிக்கியுள்ளனர்.

மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே சிறையில் அடைக்கப்பட்டு தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே மீண்டும் அரசியலுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபர் சிறிசேன- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கமானது நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை; மீண்டும் ஆயுதப் போராட்டம் வந்துவிடும் ஆகிய கோஷங்களை முன்வைத்தே ராஜபக்சே அரசியலுக்கு திரும்ப இருக்கிறாராம்.. சிங்களவர் மத்தியில் தமக்கே அதிக செல்வாக்கு இருக்கும் எனக் கருதும் ராஜபக்சே விரைவில் நடைபெறும் 'நாடாளுமன்ற தேர்தலில்' இதனை நிரூபிக்கவும் வியூகம் வகுத்து வருகிறாராம்..
இதனை எதிர்கொள்வதற்கு சிறிசேன- ரணில் விக்கிரமசிங்கே அணியும் தயாராக இருப்பதாகவும் வரும் நாட்களில் இலங்கை அரசியல் பரபரப்பாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications