'காமன்வெல்த் மாநாட்டில் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது சூழலைப் பொறுத்தே அமையும்!'

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதா இல்லையா என்பது அன்றைய அரசியல் சூழலைப் பொறுத்தே அமையும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் தலைவர்கள் மாநாடு நடக்கிறது.

மனித உரிமை மீறல் பாரிய அளவில் நடந்த நாடு என்பதால் இலங்கையில் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க பல நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.

 Salman Khurshid and Rajapakse

கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதில் பங்கேற்பதில்லை என அறிவித்துவிட்டன.

இந்தியா எந்தக் காரணம் கொண்டும் இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இலங்கை வந்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், "இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது, அப்போது நிலவும் சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.

இதற்கான முடிவை உரிய நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் எடுப்பார்," என்றார் குர்ஷித்.

இன்று கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசுகிறார் சல்மான் குர்ஷித்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+