அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவு - சுதந்திர தினத்தையொட்டி!
கொழும்பு: இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறப்பு உத்தரவு ஒன்றை அவர் பிறப்பித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்திலும் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 93 மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை 225 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. ஆனாலும் அடுத்தடுத்து கைதுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.</p>— Mahinda Rajapaksa (@PresRajapaksa) <a href="https://twitter.com/PresRajapaksa/statuses/499530268823146498">August 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அதாவது ஏதாவது காரணத்தைச் சொல்லி நல்லெண்ணம் என்று கூறி விடுவிப்பதும், காரணமே இல்லாமல் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இந்திய சுதந்திர தினத்தையொட்டி விடுவிப்பதாக கூறியுள்ளது இலங்கை அரசு.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 93 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இப்படி அவர் கடிதம் எழுதியதைக் கூட கிண்டலடித்து படு கேவலமாக சித்தரித்து இலங்கை அரசின் இணையதளம் அசிங்கமாக நடந்து கொண்டது நினைவிருக்கலாம்.
93 மீனவர்கள் தவிர அவர்களின் 62 படகுகளும் இலங்கை வசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications