ராஜபக்சேவுக்கு சல்மான் பிரச்சாரம் செய்தும் புஸ்ஸாப் போச்சே!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலையொட்டி ராஜபக்சேவுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வாக்கு சேகரித்தும் பயனில்லாமல் போயுள்ளது.
இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் மஹிந்தா ராஜபக்சேவும், 49 எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேனவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஸ்ரீசேன வெற்றி பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். அவர் ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் மூலம் கூட பிரச்சாரம் செய்தார்.

சல்மான்
மக்களை கவர பாலிவுட் நடிகர் சல்மான் கானை ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இலங்கை வருமாறு அவரின் மகன் நமல் ராஜபக்சே அழைத்தார். சல்மானும் நமலின் அழைப்பை ஏற்று கடந்த மாதம் கொழும்பு சென்று பிரச்சாரம் செய்தார்.

ஜாக்குலின்
சல்மான் கானுடன் பாலிவுட்டில் நடித்து வரும் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸும் வாக்கு சேகரித்தார்.

நமல்
சல்மான் கான் பிரச்சாரம் செய்தும் பலனில்லாமல் போயுள்ளது. சல்மான் கானும், நமல் ராஜபக்சேவும் நெருங்கிய நண்பர்கள். அண்மையில் சல்மானின் தங்கை அர்பிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நமல் ராஜபக்சே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அசின்
முன்னதாக 2010ம் ஆண்டு சல்மான் கான், அசின் நடித்த ரெடி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடந்தது. அப்போது சல்மானுக்கு ராஜஉபச்சாரம் செய்யப்பட்டது. அசின் ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் ராஜபக்சேவும் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று அவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications