கொழும்பில் மகிந்த ராஜபக்சேவுடன் சல்மான் குர்ஷித் சந்திப்பு!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று கொழும்பில் சந்தித்துப் பேசினார்.
இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள சம்லான் குர்ஷித் நேற்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு சென்றார் சல்மான் குர்ஷித். அங்கு இந்தியாவால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை அவர் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications