தீர்க்கப்பட்ட பிரச்சினை.. கச்சத்தீவு விவகாரம் குறித்து இலங்கை அதிகாரி கூறிய பதில்
கொழும்பு: பல தசாப்தங்களுக்கு பிறகு கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியிருப்பது என்பது இந்தியா விவகாரம்.. இலங்கைக்கு இதில் எதுவும் இல்லை என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலில் விவாதப்பொருளாகியுள்ளது. திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்தநிலையில், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது;-

வரலாற்று உண்மைகள் அடிப்படையில் கச்சத்தீவு ஒப்பதம் 1974 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியிருப்பது என்பது இந்தியா விவகாரம்.. இலங்கைக்கு இதில் எதுவும் இல்லை. யாழ்ப்பாணம் கிங்டமிற்கு சொந்தமானதாக கச்சத்தீவு இருந்தது.
1970 ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளுடையும் சேர்ந்த அறிவார்ந்த நபர்களால் கையெழுத்திடப்பட்டது. எனினும், இரு நாடுகளிடமும் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கச்சத்தீவு விவகாரம் குறித்து தற்போது கருத்து கூறுவது பொருத்தமானதாக இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications