For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை தேர்தல் கடைசிகட்ட மும்முரம்- வாக்காளர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து வெவ்வேறு ஊர்களில் உள்ள மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும், தேர்தல் முடிந்த பின்னர் தொழில்களுக்கு திரும்புவதற்கும் இவ்வாறு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Special bus service for those visiting hometowns for General Election

வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் இந்த சிறப்பு பேருந்துகள் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேசிய போக்குவரத்து சேவை ஆணைக்குழு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

14, 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தலைநகர் கொழும்பு மற்றும் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளிலிருந்து இந்த சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
The National Transport Commission stated that they will commence a special bus service from the 14th to 18th for people visiting their hometowns for General Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X