தாம்பரம், ஆவடியில் இல்லத்தரசிகள் சற்றும் எதிர்பார்க்காதது.. சிலிண்டர் புக்கிங்கில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களே சிலிண்டர் புக்கிங் செய்து இன்னும் வராமல் இருக்கிறதா? ஏனெனில் பலர் இந்த சிரமங்களை சந்தித்து வருவதாக கூறுகிறார்கள். சமையல் கியாஸ் சிலிண்டர் பெறுவதில் தாமதங்களைச் சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. தாம்பரம், ஆவடி மாநகராட்சிப் பகுதிகளில் இல்லத்தரசிகள் பலர் சிலிண்டர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அதேநேரம் சென்னையை சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்களோ 50 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை இருக்கிறது
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் தற்காலிக பாதிப்பாக இருந்த நிலையில், சர்வதேச அளவில் நீண்ட காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்துள்ளது இந்தியாவை பொறுத்தவரை எல்லா மாநிலத்திலும் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மார்ச் முதல் வாரத்தில் ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை சரியாகவில்லை.. அதேநேரம் நிலைமையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி சிலிண்டர் பெற்ற நாளில் இருந்து நகர்ப்பகுதிகளில் வசிப்பவர்கள் 25 நாட்களும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களுக்கு பிறகு தான் முன்பதிவு செய்ய முடியும் வகையில் சிஸ்டம் கொண்டுவரப்பட்டள்ளது. சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளான தாம்பரம், ஆவடி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சமையல் கியாஸ் முன்பதிவு செய்ய 25 நாட்களுக்கு பிறகு தான் முன்பதிவு செய்கின்றனர். அவ்வாறு முன்பதிவு செய்தவுடன் 4 மணி நேரத்திற்கு பிறகுதான் முன்பதிவுக்கான விண்ணப்பத்தை ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா? என்று தெரியவரும். அவ்வாறு விண்ணப்பித்தாலும் 2 அல்லது 3 முறை 4 மணிநேரத்திற்கு பிறகு அறிவிப்பதாக குறுஞ்செய்திகள் வருகிறதாம்.
அதனால் கூடுதலாக 2 நாட்கள் வரை சிக்கல் ஏற்படுகிறது.. அதன்பின்னர் 2, 3 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 30 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக சொல்கிறார்கள். அதேநேரம் அந்த காலத்தில் கிராமம் என்ற அந்தஸ்தில் இருந்த சென்னையின் புறநகர் பகுதிகளில் 50 நாட்கள் வரை ஆகிறது. இதனால் சிலிண்டர் இல்லாமல் மக்கள் அவதிப்படும் நிலையும் அதிகமாக உள்ளது.
பல குடும்பங்களில் 25 நாட்களுக்கு குறைவாக ஒரு சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு திண்டாட்டமாகிறது. கிராமங்களிலுமே 50 வரை எல்லாம் சிலிண்டர் எல்லா வீடுகளுக்கும் வருவது இல்லை.. இதனால் பலர் வீடுகளில் மின்சார அடுப்புகளை தேடுகிறார்கள். ஆனால் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டால் நிலைமை சிக்கலாகிறது. இதனால் பலர் கள்ளச் சந்தையில் சிலிண்டர்களை வாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.
இந்த தட்டுப்பாடு தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிப் பகுதியின் இல்லத்தரசிகளை அவதி அடைய வைத்துள்ளது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுத்து சிலிண்டர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications