விடுதலைப் புலிகளின் தாக்குதலில் உயிர் தப்பியவர் இலங்கை விமானப்படையின் புதிய தளபதி!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய ககன் புலத்சிங்கள இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக நேற்று நியமிக்கப்பட்ட ஏர் மார்ஷல் ககன் புலத்சிங்கள 1980களில் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் ஹெலிகாப்டர் விமானியாகப் பணியாற்றினார்.

1986ஆம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதியன்று புலத்சிங்கள இயக்கிய பெல் 412 என்ற ஹெலிகாப்டர், விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது.
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் புலத்சிங்கள. இந்த புலத்சிங்களதான் தற்போது இலங்கையின் விமானப் படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications