100 நாள் ஆட்சிக்குப் பின் இலங்கையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்: அதிபர் மைத்ரிபால சிறிசேன
கொழும்பு: இலங்கையில் தற்போது இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் 100 நாள் ஆட்சிக்குப்பின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று அதிபர் சிறிசேன முன்னிலையில் பதவி ஏற்றது. பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். அவருக்கு திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டது. அவருடன் சேர்த்து 27 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் இணை அமைச்சர்களாகவும், 8 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் பேசிய அதிபர் சிறிசேன, தற்போது அமைந்துள்ள அமைச்சரவை தற்காலிகமானது. 100 நாள் ஆட்சிக்குப்பின் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
அதன்பின் நியமனம் செய்யப்படுபவர்கள்தான் நிரந்தர அமைச்சர்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் திறமையாக செயல்பட வேண்டும்.
ஊழல் மற்றும் தவறான நடத்தையை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். மக்களுக்கு பணியாற்றுவதில் புதிய அமைச்சர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும். முறைகேடு மற்றும் ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications