தமிழகம், புதுவையை சேர்ந்த 116 மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு
தமிழகம், புதுவையைச் சேர்ந்த 116 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: தமிழகம், புதுவையைச் சேர்ந்த 116 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்கிற பொய்க் குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படை கைது செய்து சிறைகளில் அடைப்பது தொடர் கதையாகி வருகிறது. மத்திய அரசும் இதைத் தடுக்கவில்லை.

இந்த மீனவர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை மீட்க வேண்டும் என்பது தமிழகத்தின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 116 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுதலை செய்ய் இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications