அத்துமீறி நுழையும் யாரையும் சுடும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது: பிரதமர் ரனில்
கொழும்பு: இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் யாரையும் சுட்டுத் தள்ளும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வேன் என்று அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை சென்றபோது ரனில் விக்ரமசிங்கேவை சந்தித்து அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் ரனில் பிரபல இந்திய செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்,
எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் யாரையும் சுட்டுத் தள்ளும் அதிகாரம் இலங்கை கடற்படைக்கு உள்ளது. அதிலும் கடலின் அடிப்பகுதியில் பெரிய வலைகளை விரித்து மீன் பிடிக்கப்படுகிறது. அதை உடனே நிறுத்த வேண்டும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப்பயணம் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications