முதல் வெளிநாட்டு பயணம்.. இந்தியாவுக்கு வரும் இலங்கை அதிபர்.. உன்னிப்பாக கவனிக்கும் சீனா
கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க வெற்றி பெற்றார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக திசநாயகே இன்று இந்தியா வருகிறார். மூன்று நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும் திசநாயக்க, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரமேதாசா ஆகியோரை தோற்கடித்து இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, இலங்கையின் 9-வது அதிபராக திசநாயகே பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக திசநாயகே இந்தியா வர முடிவு செய்தார். அதன்படி, இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். மூன்று நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரும் திசநாயக்க, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல, மீனவர்கள் விவகாரம் குறித்து பேசப்பட வாய்ப்பு உள்ளது. பூகோள ரீதியாகவும் இந்தியாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இலங்கையை கைக்குள் போட்டுக்கொள்ள சீனா வியூகம் வகுத்து வருகிறது. இலங்கையில் பல்வேறு முதலீடுகளை சீனா செய்ய தீவிரம் காட்டுகிறது. அதேபோல, சீனாவின் உளவு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள், இலங்கை துறைமுகங்களில் நிறுத்துவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உள்ளது.
இத்தகைய சூழலில்தான், இலங்கை அதிபர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருகை தந்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் இலங்கை மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்து இருந்தார்.
இத்தகைய சூழலில் தான் இலங்கை அதிபரின் இன்றைய இந்திய பயணம் முக்கியத்தும் பெற்றுள்ளது. 15 முதல் 17 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அதிபர் திசநாயகே பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக டெல்லியில் நடைபெறும் தொழில் துறை நிகழ்ச்சியிலும் இலங்கை அதிபர் பங்கேற்க உள்ளார். அதேபோல புத்த கயாவிற்கும் செல்ல உள்ளார்.
இலங்கை அதிபரின் இந்தியா வருகையை சீனாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications