கோடாலியால் வெட்டப்பட்ட இலங்கை அதிபர் மைத்ரிபாலவின் சகோதரர் மரணம்!
கொழும்பு: கோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி வந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் நண்பர் ஒருவரால் கோடாலியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார் பிரியந்த சிறிசேன. அவர் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கைக்கு நாளைதான் திரும்ப உள்ளார்.
இதனால் நாளை மறுநாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறிசேனவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியந்தவை தாக்கிவிட்டு சரணடைந்த நபரை ஏப்ரல் 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications