For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் ஜெயலலிதா படத்துக்கு கொம்பு வைத்து கொடும்பாவி எரிப்பு: புகைப்படங்கள்

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிக்கப்பட்ட புகைப்படங்களை அந்நாட்டு உயர் அதிகாரி லக்ருவன் வன்னியராச்சி என்பவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே சேதிய அமைப்பின் சம்மேளனம் இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

இந்நிலையில் அந்த போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இலங்கை போலீஸ் உயர் அதிகாரி லக்ருவன் வன்னியராச்சி என்பவர் வெளியிட்டுள்ளார்.

ஊர்வலம்

ஊர்வலம்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜெயலலிதாவுக்கு கொம்பு வைத்தது போன்ற புகைப்படம் அடங்கிய பலகையை ஏந்தி வந்தனர்.

மோடி

மோடி

பிரதமர் நரேந்திர மோடி என்ன சர்வாதிகாரியா அல்லது ஜனநாயகவாதியா என்று கேள்வி எழுப்பிய பலகையை போராட்டக்காரர்கள் ஏந்தி வந்தனர்.

படம்

படம்

போராட்டக்காரர்கள் வைத்திருந்த பலகையில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு கீழ் எ புல் இன் தி சைனா ஷாப் (A Bull in the China Shop) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

ராஜபக்சே

ராஜபக்சே

போராட்டக்காரர்கள் ராஜபக்சேவின் புகைப்படம் அடங்கிய பலகையை வைத்திருந்தனர். அதில் இனி அடிபணியப் போவது இல்லை, சரணடையப் போவது இல்லை என்று எழுதப்பட்டிருந்தது.

இந்திய தலையீடு

இந்திய தலையீடு

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதை கண்டிப்பதாக எழுதப்பட்டிருந்த பேனரை போராட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர்.

உருவபொம்மை

உருவபொம்மை

இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் ஜெயலலிதாவின் உருவபொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

English summary
Activists of Sri Lankan Nationalist Organisations gathered opposite the Indian mission in Colombo and burnt Jayalalithaa's effigy to protest against the undue influence exerted by her on the Indian government to act against Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X