இலங்கையில் தமிழர்களைப் போல முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும்: அமைச்சர் ரிசாத் பதியுதீன்
இலங்கையில் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு: இலங்கையில் தமிழர்களைப் போல முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த நேரிடும் என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அம்பாறை, கண்டி பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளை தூண்டிவிட்ட பவுத்த பிக்குகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பேசியதாவது:
முஸ்லிம் மக்களையும் பள்ளிவாசல்களையும் பாதுகாப்பது குறித்து அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் உறுதி அளிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடர கூடாது.
மட்டக்களப்பில் வன்முறையை தூண்டுகிறார் பவுத்த பிக்கு. முஸ்லிம்களின் சொத்துகளை அழித்து கோழைகளாக்க முயற்சிக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தின் சொத்துக்களை அழித்து அவர்களை கோழைகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள்தான் இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கின்றன.
இவ்வாறு ரிசாத் பதியுதீன் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications