இது ரொம்ப தப்புங்க.. ரணில் வீட்டை தீ வைத்தவர்களுக்கு இலங்கை முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனா கண்டனம்
கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.

பொருளாதார நெருக்கடி
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

ராஜபக்ஷே சொத்துக்கள் தகர்ப்பு
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதிபர் மாளிகை முற்றுகை
இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்தது. அதேபோல் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து வந்தன. இந்த நிலையில் அதிபர் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த நீச்சல் குளம், படுக்கை அறை, சமையல் சூடம் என அனைத்து பகுதிகளுக்கும் சென்று மகிழும் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின. பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றப்போவதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷே அங்கிருந்து தப்பி ஓடினார்.

பிரதமர் ரணில் ராஜினாமா
இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்து இருக்கிறார்.

தீ வைப்பு
ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து விலகியும் அவர் வீட்டின் முன் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. மாறாக தொடர்ந்து அவரது வீட்டை நோக்கி ஏராளமான மக்கள் குவிந்து முழக்கங்களை எழுப்பினர். போலீஸ் பாதுகாப்பை மீறி ரணிலின் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை தீ வைத்து எரித்து இருக்கின்றனர். இதனால் அங்கு நிலையை மிகவும் மோசமடைந்துள்ளது.

மஹேலா ஜெயர்வர்தனா
ரணில் விக்கிரமசிங்கே வீடு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இந்த சம்பவத்தை நியாயப்படுத்தியும், விமர்சித்தும் கருத்திட்டு வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்தனே கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "இது அந்தமாதியான இயக்கம் அல்ல. அமைதியான போராட்டம். வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. இந்த செயலை முழு மனதுடன் கண்டிக்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications