"உக்கிர பைரவபுரம்"..... யாழ்ப்பாணத்தில் படமாக்கப்படும் முதல் த்ரில்லர் மெகா சீரியல்
யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக "உக்கிர பைரவபுரம்" என்ற த்ரில்லர் மெகா சீரியலுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துக்காக 'வணக்கம் தாய்நாடு', 'சர்வதேச புலனாய்வு' என்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறார் கனடாவை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ரிஷி.
அவரது தயாரிப்பில் தற்போது உருவாகிறது புதிய சஸ்பென்ஸ் த்ரில்லர் மெகா சீரியலான உக்கிர பைரவபுரம். இதற்கான முதல் கட்ட படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறிய கிராமம் ஒன்றில் யாருக்கும் புரியாமல் மர்மமாக நடைபெறும் சில விஷயங்கள்; யுத்தம் நடந்து தற்போது இலங்கை ராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதியில் 22 வயதுப் பெண்ணுக்கு நினைவுக்கு வரும் 23 ஆண்டுகளுக்கு முந்தைய முற்பிறவி நினைவுகள்; யாழ்ப்பாணத்தில் யுத்தம் நடந்த காலத்தில் வெளிநாட்டு உளவுத்துறைகள் செய்த உளவு வேலைகள் என இந்த மூன்று புள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் உக்கிர பைரவபுரம் சீரியல் உருவாகிறது.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. வெளிநாட்டு உளவுத்துறைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், அமெரிக்காவிலும் கனடாவிலும் படமாக்கப்பட இருக்கிறது.
உக்கிர பைரவபுரம் மெகா சீரியலின் அறிமுகக் காட்சி:
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications