Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை- வரவேற்ற டக்ளஸ் தேவானந்தா

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இலங்கையின் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் எல்.முருகன், அண்ணாமலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Union Minister L Murugan, Annamalai visit Sri Lanka

யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடைந்த மத்திய அமைச்சருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை அமைச்சர் முருகன் சந்தித்தார். அப்போது அபிவிருத்தி ஒத்துழைப்பில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியா வழங்கும் முக்கியத்துவம் குறித்து இச்சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்த மத்திய அமைச்சர் முருகன், பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்கு முதலிடம் என்றக் கொள்கையின்கீழ் இந்தியா தொடர்ந்து வழி நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Union Minister L Murugan, Annamalai visit Sri Lanka

பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் உள்ள அப்துல்கலாம் சிலைக்கு அமைச்சர் முருகன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்திய நிதியுதவியின் கீழ் 250 இலங்கை மக்களுக்கு உணவு தானியங்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தையும் அமைச்சர் முருகன் பார்வையிட்டார்.

Union Minister L Murugan, Annamalai visit Sri Lanka

இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை திறந்து வைக்க உள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி வரை இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எல். முருகன் கலந்து கொள்ள உள்ளார்.

இதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் எல்.முருகனுடன் தனிப்பட்ட பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அண்ணாமலை சந்தித்து பேசுகிறார்.

Union Minister L Murugan, Annamalai visit Sri Lanka

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தரும் என நம்பப்படுகிறது 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் 13-வது சாசன திருத்தம் என்பது அதிகாரப் பகிர்வு தரக் கூடியதே அல்ல. ஏமாற்று என்கிறது தமிழர் தரப்பு. அதேநேரத்தில் 13-வது சரத்தை அமல்படுத்துவது என்பது பிரிவினைவாதத்தை ஊக்கப்படுத்தும் என்கிறது சிங்கள தரப்பு. இதனால் ரணில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர் சிங்களர்கள். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையிலான இலங்கை குழு சென்றிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Union Minister L Murugan, Annamalai visit Sri Lanka

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பயணம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த மாண்புமிகு இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்களுக்கு பாரம்பரிய வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரை அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+