ஈழ கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் இலங்கையில் இருந்து இன்று நார்வே-க்கு நாடு கடத்தப்படுகிறார்!!
கொழும்பு: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச.ஜெயபாலன் இன்று இரவு நார்வே நாட்டுக்கு நாடு கடத்தப்பட இருக்கிறார்.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த போது சுற்றுலா விசா விதிமுறைகளை மீறினார் என்ற புகாரின் பெயரில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜெயபாலன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கொழும்பு கொண்டு செல்லப்பட்ட அவர், அந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையினரால் மிரிஹானையிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தடுப்பு முகாமில் இருக்கும் ஜெயபாலனை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் இன்று காலை சந்தித்து பேசினார்.
இதனிடையே ஜெயபாலன் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 9.20 மணிக்கு புறப்படும் TK731 Turkis விமானம் மூலம் துருக்கி வழியாக பயணமாகி நாளை முற்பகல் நார்வே சென்றயடைய என இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications