யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு 2015-ல் மோடி போகாதது ஏன் தெரியுமா? முன்னாள் தூதர் ஷாக் தகவல்!
யாழ்ப்பாணம்: இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக இலங்கைக்காக இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் நடராஜன் இதுவரை வெளியாகாத தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்திய துணை தூதராக 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் ஏ.நடராஜன். From the Village to the Global Stage என்ற தலைப்பில் புதிய புத்தகம் ஒன்றை ஏ.நடராஜன் எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் விரைவில் கோவையில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மோடி வழிபாடு நடத்தாதது ஏன்?: அந்தப் புத்தகத்தில் ஏ.நடராஜன் எழுதியிருப்பதாவது: பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்தின் போது நல்லூர் கோவில் அல்லது மாவிட்டாபுரம் கந்தசாமி கோவில் அல்லது காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு அழைத்துசெல்ல திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும்; குறிப்பிட்ட நேரத்தில்தான் கோவில் நடை திறக்கப்படும் என்கிற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. ஆனால் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அப்போது 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார். இவ்வாறு ஏ.நடராஜன் பதிவிட்டுள்ளார்.

இலங்கையும் இந்திய பிரதமர்களும்: பிரதமர் மோடி இலங்கைக்கு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13,14-ந் தேதிகளில் பயணம் மேற்கொண்டார். அரசு முறை பயணமாக 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி. 1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை சென்றார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அந்த பயணத்தின் போது இலங்கை கடற்படை வீரர் ஒருவரால் ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. 2008-ல் சார்க் மாநாட்டில் பங்கேற்க அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சென்றிருந்தார். ஆனால் அது இலங்கைக்கான தனிப்பட்ட அரசு முறை பயணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications