ஈரக்குலையே நடுங்கும்.. இந்திய நர்ஸ் ஆஸ்திரேலியாவில் உயிரோடு துடிக்க துடிக்க.. காதல் சைக்கோவின் வெறி
சிட்னி: இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர் என்பவர் ஆஸ்திரேலியாவில் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து பல்வேறு மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்று வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கணிசமான இந்தியர்கள் படித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆஸ்திரேலியா நாட்டில் நர்சிங் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலியா படுகொலை: இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர் என்பவர் ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்ச்ஸ் என்ற பகுதியில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் காதலன் அவரை உயிருடன் புதைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. தாரிக்ஜோத் சிங் என்பவர் இந்த கொலையைச் செய்ததாக அடையாளம் காணப்பட்டது.
நபர் ஜாஸ்மீன் கவுரை பழிவாங்கும் நோக்கில் இப்படி கொடூரமாகக் கொலை செய்ததும் தெரிய வந்தது. இந்தக் கொடூர சம்பவம் கடந்த 2021 மார்ச் மாதம் நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தனது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த புதன்கிழமை அவருக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
என்ன நடந்தது: தாரிக்ஜோத் சிங் அந்தப் பெண்ணின் உடலை ஆழமாகக் குழி தோண்டி புதைத்ததும் தெரிய வந்தது. இது தொடர்பான விசாரணையில் தான் பல ஷாக் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. தாரிக்ஜோத் சிங்கும் ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், சில காரணங்களால் ஜாஸ்மீன் தாரிக்ஜோத் உடன் பிரேக்ஆப் செய்துவிட்டார்.
இதை ஏற்றுக் கொள்ள மறுத்த அந்த இளைஞன் ஜாஸ்மீனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாஸ்மீனின் தாய் ரஷ்பாலும் வாக்குமூலம் அளித்திருந்தார். அதாவது தனது மகள் பல முறை வேண்டாம் எனச் சொல்லியும் தாரிக்ஜோத் சிங் அவரை விடாமல் பின்தொடர்ந்து டார்ச்சர் செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
அடிலெய்டில் ஜாஸ்மீன் சிங் பயிற்சி செவிலியராக இருந்த நிலையில், அவரை அங்கிருந்து கடத்தியுள்ளார். காரின் பின்பக்கம் அவரை போட்டு லாக் செய்த இளைஞன் 4 மணி நேரம் அப்படியே வண்டியை ஓட்டிச் சென்றுள்ளான். அங்கே ஃபிளிண்டர்ஸ் மலைத்தொடரில் கண்கள் கட்டியுள்ளான். மேலும், உடலையும் அங்கிருந்த கேபிள்களை கொண்டு கட்டி அப்படியே புதைத்துள்ளான் இந்த கொடூர சைக்கோ.
கொடூர கொலை: அசாதாரண வகையில் கொடுமைப்படுத்தி ஜாஸ்மீனை அவன் கொன்றதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அவர் மேலும் கூறுகையில், "அந்த அப்பாவி பெண்ணை இவன் உயிருடன் புதைத்துள்ளான். அந்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மண்ணை விழுங்கி மூச்சு திணறி அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதுபோன்ற ஒரு மரணம் யாருக்கும் வரக் கூடாது. இது முழுக்க முழுக்க பயங்கரமான ஒரு சம்பவம். உயிரிழக்கும் போது ஒவ்வொரு நொடியும் அந்த பெண் மிகப் பெரிய துன்பத்தை அனுபவித்து இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் தாயார் கூறுகையில், "அவரை காப்பாற்ற யாரும் இல்லை. கடைசி நொடிகளில் எனது மகள் அனுபவித்த துன்பத்தைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. எனது மகளுக்கு இந்த கொடுமையைச் செய்த அந்த நபரை நான் ஒரு போதும் மன்னிக்க வேண்டும். அவரை தூக்கிலிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
-
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
"மூச்சு இருந்தது.." 130 அடியில் பங்கி ஜம்பிங் விபரீதம்.. இளம்பெண்ணுக்கு நடந்தது என்ன! பகீர் தகவல் -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications