"You fool".. திடீரென ஆங்கிலத்தில் பேசிய வாத்து.. ரெக்கார்டிங்கை கேட்டு திகைத்த அதிகாரிகள்.. எப்படி?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் வாத்து ஒன்று ஆங்கிலத்தில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வாத்து ஆங்கிலத்தில் பேசியது உறுதி செய்யப்பட்டு, ஆராய்ச்சி கட்டுரை ஒன்றும் இதை பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக உலகில் இருக்கும் பல விலங்குகள் மனிதர்கள் பேசுவதை மீண்டும் உச்சரிக்கும் திறன் கொண்டதாக மாறி வருகிறது. முறையான பயிற்சிகள் மூலம் சில பறவைகள், விலங்குகள் மனிதர்கள் பேசுவதை மீண்டும் உச்சரிக்கும் திறன் கொண்டதாக மாற கூடியது.
உதாரணமாக கிளிகள், யானைகள், திமிங்கலம், டால்பின் மற்றும் சில வகை நாய்கள் இப்படி மனிதர்கள் பேசுவதை மீண்டும் ரிப்பீட் செய்யும் திறன் கொண்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பல விலங்குகளில் இதே ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சில வகை பறவைகள் சத்தங்களை கேட்டுவிட்டு அதே போன்ற ஒலிகளை எழுப்பும் திறன் கொண்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சத்தங்கள்
விலங்குகளின் இந்த தனி திறமைகள் உலகம் முழுக்க பல நாடுகளில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆஸ்திரேலியாவில் வாத்து ஒன்று ஆங்கிலத்தில் மனிதர்கள் பேசியதை மீண்டும் திருப்பி சொன்னது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கான்பெரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் இப்போது நடக்கவில்லை. இது 1987ல் நடந்த சம்பவம். அப்போது வாத்து பேசியதன் ஆடியோ ரெக்கார்டிங் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்படி என்று பார்க்கலாம்..

எப்படி நடந்தது?
உலகம் முழுக்க விலங்குகள் மற்றும் பறவைகளின் குரல் திறன் மற்றும் அறிவுத்திறன் குறித்து சோதனைகளை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நெதர்லாந்தை சேர்ந்த கேரல் டென் கேட் என்ற ஆராய்ச்சியாளர் முக்கியமானவர். நெதர்லாந்தில் லெய்டன் இன்ஸ்டிடியூட் பல்கலையில் இவர் ஆராய்ச்சி பேராசிரியராக இருக்கிறார். இன்னொரு ஆராய்ச்சியாளர் ஒருவர் மூலமாக இந்த வாத்தின் ரெக்கார்டிங் இவருக்கு கிடைத்துள்ளது. வேறு ஒரு பறவையை ஆராய போய் இந்த ரெக்கார்ட் கிடைத்துள்ளது. வாத்தை வைத்து ஆராய்ச்சி செய்வதற்காக பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் இந்த ஆடியோ 1987ல் பதிவாகி உள்ளது.

உண்மை
இந்த வீடியோ மற்றும் ஆடியோவை சோதனை செய்ததில் அந்த வாத்து உண்மையில் ஆங்கிலத்தில் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. "You body fool!" மற்றும் "You fool!" என்ற இரண்டு வார்த்தைகளை இது மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறது. இந்த வாத்தின் பெயர் ரிப்பர் ஆகும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இது மஸ்க் வகை வாத்து ஆகும். இந்த வகை வாத்துகள் மிகவும் பெரியதாக இருக்க கூடியது. அதேபோல் வால் சின்னதாக இருக்கும். கொஞ்சம் குறும்புத்தனமான வாத்து வகையை சேர்ந்தது ஆகும் இது.

டேப்
இந்த ரெக்கார்டிங் டேப் இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் நெதர்லாந்தை சேர்ந்த கேரல் டென் கேட் என்ற ஆராய்ச்சியாளர் கைக்கு கிடைத்தது. இந்த ஆடியோவை சோதனை செய்துவிட்டு அதை அவர் உண்மை என்று உறுதி செய்துள்ளார். அதோடு இந்த ஆடியோ தொடர்பாக ஆய்வு செய்து அது குறித்து ஆய்வு கட்டுரை ஒன்றையும் லெய்டன் இன்ஸ்டிடியூட் பல்கலையில் வெளியிட்டு உள்ளார். இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று உலக அளவில் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏன்
இந்த ரெக்கார்டிங்கை மேற்கொண்ட அதிகாரிகள் இப்போது இதை மீண்டும் கேட்டு திகைத்து போய் உள்ளனர். இதை நாங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்று கூறியுள்ளனர். இதன் மூலம் வாத்துகளில் சில வகையும் மனிதர்களின் குரல்களை மீண்டும் எதிரொலிக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்ற முடிவிற்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். இந்த வாத்து கதவு திறக்கும் சத்தம் ஒன்றையும் எழுப்பி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளக்கம் இல்லை
இதனால் அந்த வாத்து தனது காவலர் பேசியதை மீண்டும் மீண்டும் கேட்டு இந்த வார்த்தைகளை பழகி இருக்கலாம். தான் இருந்த கூண்டின் சத்தத்தை பழகி மீண்டும் அதை ஒலிபரப்பும் திறனை கொண்டு இருக்கலாம் என்று அந்த ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு தனது எதிர் பாலினத்தை கவர இப்படி செய்து இருக்கலாம். பொதுவாக பறவைகள் எதிர் பாலினத்தை கவர நிறைய சேட்டைகள் செய்யும்.

சேட்டைகள்
சில பறவைகள் இதன் காரணமாகவே இனிமையான ஒலிகளை எழுப்பும். அப்படி இந்த வாத்து மனிதர் போல ஒலி எழுப்பும் பயிற்சியை பெற்று இருக்கலாம். தனது எதிர்ப் பாலினத்தை கவரஇப்படி செய்திருக்கலாம். ஆனால் வாத்தின் தொண்டை பகுதி இப்படி ஒலிகளை மீண்டும் எழுப்பும் திறன் கொண்டது கிடையாது. அசாத்திய பயிற்சியின் மூலம் அந்த வாத்து இப்படி மீண்டும் ஒலிகளை எழுப்பி இருக்கலாம், இது குறித்து கூடுதல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications