என்ன அழகு.. ஒவ்வொரு பிரேமும்.. ஆஹா.. காதலே காதலே பிரமாதம்.. 96ஐ புகழும் தினேஷ் கார்த்திக்
Recommended Video

சிட்னி: 96 திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன் என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
விஜய் சேதுபதியின் 96 திரைப்படத்தை பார்த்துவிட்டு பெரும்பாலானோருக்கு பள்ளிப் பருவத்து காதல் நினைவுக்கு வந்தது. படத்தில் விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் பள்ளி பருவத்தில் காதலிப்பர்.
ஆனால் அதை ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் மறைத்து வைத்திருப்பர். இந்நிலையில் த்ரிஷாவிடம் தனது காதலை சொல்ல தூது அனுப்புவார் விஜய் சேதுபதி. ஆனால் தூது அனுப்பும் பெண் விஜய் சேதுபதியின் பெயரை மறந்துவிட, அதனால் தன் பின்னால் சுற்றும் வேறு ஒரு பையன்தான் தூது அனுப்பியிருப்பதாக நினைத்து த்ரிஷா அவரை திட்டி அனுப்பி விடுவார்.

முட்டாள்தனம்
இதனால் தன் மீது த்ரிஷாவுக்கு விருப்பம் இல்லை என நினைத்து பள்ளி பருவம் முடிந்து அவரவர் வழியில் பயணிப்பர். ஒரு நாள் த்ரிஷாவும் விஜய் சேதுபதியும் சந்தித்து நடந்தவற்றை பேசும் போதுதான் தான் வேறு ஒருவரை மணந்ததன் மூலம் எத்தனை முட்டாள்தனம் செய்து விட்டோம் என்பது த்ரிஷாவுக்கு தெரியவரும்.

இனிய காதல் கதை
இப்படியாக இந்த படம் இனிய காதல் கதையாக நகரும். இந்த படத்தை பார்த்துவிட்டு அவரவர் பள்ளி பருவத்தை அசைப்போடாதவர்களே இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்ல போனால் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களின் எண்களை எப்படியோ தேடி பிடித்து வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கியவர்களும் உண்டு.
|
நன்றாக இருந்தது
அந்த வகையில் நல்ல கதையம்சம் கொண்ட இந்த படத்தை கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 96 திரைப்படத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது.
|
அஸ்வின் ரவிச்சந்திரன்
அதிலிருந்து விஜய் சேதுபதியின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். காதலே காதலே பாடல் நன்றாக இருந்தது. படத்தில் ஒவ்வொரு கட்டமைப்பும், இசையும் எனக்கு பிடித்திருந்ததது என்று கூறியுள்ள தினேஷ், அஸ்வின் ரவிச்சந்திரனிடம் படம் எப்படி இருந்தது என கேட்டுள்ளார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications