ஷேன் வார்னே மரணத்திற்கும் கோவிட் தடுப்பூசிக்கும் தொடர்பு.. பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர் பகீர்
சிட்னி: ஷேன் வார்னே மரணம் கோவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையது என பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர் பகீர் தகவலை அளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே, கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தாய்லாந்தில் அவரது பங்களாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவருடைய மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் ஷேன் வார்னே மரணம் கொரோனா தடுப்பூசியான எம்.ஆர்.என்.ஏவுடன் தொடர்புடையது என இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இதய நோய் நிபுணரும் ஆஸ்திரேலிய மருத்துவருமான அசீம் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கிறிஸ் நீல் மற்றும் அசீம் மல்ஹோத்ரா ஆகியோர் ஷேன் வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவருக்கு இதய நோய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த இரு மருத்துவர்களும் கூறுகையில் ஒரு கோவிட் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியானது அவர்களின் உடல்நிலையில் விரைவாக பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும்.
சர்வதேச முன்னாள் விளையாட்டு வீரரான ஷேன் வார்னே 52 வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைவது என்பது அசாதாரணமானது. அதே நேரம் ஷேன் வார்னேவின் உடல் எடையானது அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. மேலும் அதிக புகைப் பழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். இதன் மூலம் அவர் ஆரோக்கியமான வாழ்வியலை கடைப்பிடிக்கவில்லை என தெரிகிறது.
அவரது இதய தமனிகளில் லேசான பாதிப்புகள் இருந்தன. எனினும் கொரோனா தடுப்பூசியை இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டதும் அவரது உடல்நிலை வேகமாக முன்னேற்றம் கண்டது. ஆஸ்திரேலியா உள்பட உலகமெங்கும் காணப்படும் அதிக மரணங்களுக்கு கோவிட் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் முக்கிய காரணம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்த மருந்தின் பயன்பாடு உலகமெங்கும் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த தடுப்பூசியை அவர் 9 மாதங்களுக்கு முன் எடுத்துக் கொண்டார். எங்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகள், எங்கள் தந்தை ஃபைசரின் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசியை 2 டோஸ் செலுத்திய சில மாதங்களில் இறந்துவிட்டனர். இதை நாங்கள் பார்த்துள்ளோம். கொரோனா தடுப்பூசிகள் இதயத்தை மோசமான முறையில் பாதிக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஷேன் வார்னேவின் நண்பரும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரருமான திமிட்ரி மாஸ்கரேன்ஹாஸ் கூறுகையில் நான் எனது நல்ல நண்பனை இழந்துவிட்டேன். அவருடைய மரணத்தை நிச்சயம் தடுத்திருக்கலாம் என்பதை எண்ணும் போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் கொரோனா தடுப்பூசி போடாதிருந்திருந்தால் இன்று உயிருடன் இருந்திருப்பார். எப்போதுமே அடுத்தவர்கள் காயமடையவோ பாதிப்படையவோ ஷேன் வார்னே விட மாட்டார். எனவே மருத்துவர்களின் இந்த ஆய்வை ஏற்று இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் நிறுத்த நான் ஆதரவு அளிப்பேன் என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications