சிவகார்த்திகேயன் சொல்லி வாயை மூடல! அதிர்ந்து பார்த்த பாபர்.. அர்ஷ்தீப்பின் ஒற்றை பால்! என்ன நடந்தது?
சிட்னி: பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கு இடையிலான டி 20 உலகக் கோப்பை முதல் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.
2022 உலகக் கோப்பையில் இன்று பாகிஸ்தான் - இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு எடுத்தது.
இன்று ஆடும் இந்திய அணியில், கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். இதனால் இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், அக்சர், அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இந்திய அணி
இந்திய அணியில் ஷமி, அர்ஷ்தீப், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளதால், பவுலிங் ஆர்டர் பார்க்க சிறப்பாக இருக்கிறது. அதோடு டாஸ் வென்றதும் இந்திய அணிக்கு சாதகமாக மாறி உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக அழுத்தம் கொடுத்தது. அந்த ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்தை பாகிஸ்தான் வீரர்களால் தொடக்கூட முடியவில்லை.

விக்கெட்
இதில் ஒரே ஒரு பந்து மட்டும் வைடில் சென்றது. பாபர் - ரிஸ்வான் இருவர்களாலும் புவனேஷ்வர் குமார் பந்தை தொட கூட முடியவில்லை, அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அர்ஷ்தீப் சிங், பாபர் ஆஸம் விக்கெட்டை எடுத்தார். அர்ஷ்தீப் சிங் உலகக் கோப்பை போட்டி ஒன்றில் வீசும் முதல் பந்து இதுதான். அந்த பந்திலேயே பாபர் ஆஸம் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் அர்ஷ்தீப் சிங் எடுத்தார். பாபர் ஆஸம் இதில் டக் அவுட் ஆனார்.

டக் அவுட்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆஸம் இப்படி டக் அவுட் ஆனதும் பாகிஸ்தான் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று இந்த போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நடிகர் சிவகார்த்தியேகன் சிறப்பு கமெண்ட்ரி செய்தார். பிரின்ஸ் படத்திற்கு விளம்பரம் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் இன்று கமெண்ட்ரி செய்தார். அப்போது அவரிடம் ஆர். ஜே பாலாஜி உங்களுக்கு இந்திய வீரர்கள் அல்லாமல் வேறு எந்த நாட்டு வீரரை பிடிக்கும் என்று கேட்டார்.

பாபர்
அதற்கு சிவகார்த்திகேயன்.. எனக்கு பாபர் ஆஸம் பிடிக்கும் என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன், பாபர் ஆஸம் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அதோடு இல்லாமல் அதன்பின் ரிஸ்வானை பிடிக்கும் என்றும் சிவகார்த்திகேயன் கூறினார். அவர் சொன்ன அடுத்த பாலிலேயே ரிஸ்வானும் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்தடுத்து இரண்டு வீரர்களும் அவுட் ஆன காரணத்தால் பாகிஸ்தான் அணி தற்போது ஓப்பனர்களை இழந்து திணறி வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications