ஹாட் பாக்ஸை திறந்து பார்த்தால்.. என்ன இது உள்ளே? அதிர்ச்சியான இந்திய வீரர்கள்.. பட்டென பறந்த புகார்!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை டி 20 தொடரில் ஆடி வரும் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது தொடர்பாக ஐசிசிக்கு புகாரும் அளித்துள்ளனர்.
"அஸ்வின் கிளியர்ஸ் தி இன்னர் சர்க்கிள்".. வர்ணனையாளர் அஸ்வினின் பவுண்டரியை புகழ பாகிஸ்தானை திரில்லிங் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இந்த உலகக் கோப்பை 2022 டி 20 சீஸனின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பால் வரை சென்று வென்றுள்ளது.
இந்த வெற்றி காரணமாக இந்திய அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்களும் உள்ளன.

காரணம் 1
இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. ஷமி இந்திய அணிக்குள் வந்த காரணத்தால் பவுலிங் சிறப்பாக மாறி உள்ளது. ஷமி சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அதேபோல் பவர் பிளேவில் அர்ஷ்தீப் சிங் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முதல் அஸ்வினும் நன்றாக பவுலிங் செய்வதால் இந்திய அணியின் பவுலிங் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருக்கிறது. இன்னும் டெத் ஓவர்களில் இந்திய அணி கொஞ்சம் சுதாரிக்க வேண்டும்.

அடுத்த போட்டி
இந்த நிலையில் நாளை இந்திய அணி நெதர்லாந்திற்கு எதிராக ஆட உள்ளது. இந்த சீசனில் நெதர்லாந்து நன்றாக ஆடி வருகிறது. இதனால் அந்த அணியிடம் இந்தியா கவனமாக ஆட வேண்டும். கத்துக்குட்டி அணிதான் என்று எண்ணி சொதப்பிவிட கூடாது. இதனால் இந்திய அணி தீவிரமாக பயிற்சிகளை மேற்கொள்வதற்காக நேற்று காலையே சிட்னி சென்றுவிட்டது. ஆனால் சிட்னி சென்ற இந்திய அணிக்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன.

பிரச்சனை
சிட்னியில் ஹோட்டலில் தங்கி இருக்கும் இந்திய அணிக்கு குளிர்ந்த பிரெட் உணவாக கொடுக்கப்பட்டு உள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு நல்ல புரோட்டின் நிறைந்த உணவுகளை கொடுக்காமல் வெறும் பிரெட்களை.. அதுவும் குளிர்ந்த நிலையில் இருக்கும் பிரெட்களை வழங்கி உள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இது இந்திய வீரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கொடூரம்
நேற்றும் இதேபோல் பிற்பகலில் குளிர்ந்த நிலையில் இருக்கும் உணவுகளை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக இந்திய வீரர்கள் தற்போது ஐசிசி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் புகார் வைத்து உள்ளனர். நீங்கள் கொடுக்கும் உணவு நன்றாக இல்லை என்று புகார் வைத்து உள்ளனர். இன்று காலை ஹாட் பாக்ஸை திறந்த போது அதில் குளிர்ந்த நிலையில், பிரெட்கள் மட்டும் இருந்ததை பார்த்து இந்திய வீரர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

மைதானம்
இது போக இந்திய வீரர்கள் இன்று பயிற்சிக்கும் செல்லவில்லை. ஏனென்றால் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி செய்யும் மைதானம் 40 கிமீ தொலைவில் கொடுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி செய்ய எதற்கு அவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று வீரர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாகவும் ஐசிசி நிர்வாகத்திடம் வீரர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications