நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு "கடிவாளம்".. இதெல்லாம் தேவையில்லாத குழப்பம்.. தமிழக அரசு புது அதிரடி
சென்னை: நகராட்சி நிர்வாக இயக்குனரகம், அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்கவும், மக்கள் ஓய்வெடுக்க சில பசுமையை வழங்கவும் திறந்தவெளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுப் பகுதிகள் போன்றவை கட்டப்படுகின்றன.

விதிமுறைகள்: ஒரு திறந்தவெளி முன்பதிவுக்கு 10 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட பரிமாணமும் 100 சதுர மீட்டருக்கும் அதிகமான அளவும் இருக்க வேண்டும். அதேபோல, தற்போதைய விதிமுறைகளின்படி, திறந்தவெளிக்கான பரப்பளவு நிலப்பரப்பில் 10 சதவீதம் இருக்க வேண்டும்.
அந்தவகையில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரால், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவைகளில், 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில், 10 சதவீத நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பது கட்டாயம். இந்த நிலங்களை, உள்ளாட்சி அமைப்புகள், பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கடிவாளம்: ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள், இந்த நிலங்களை, வேறுவகையான தேவைகளுக்கு பயன்படுத்துவதாக சமீபகாலமாகவே, புகார்கள் கிளம்பி உள்ளனவாம். இதற்கு கடிவாளம் போடுவதற்காகவே, அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், "பொது பயன்பாட்டுக்கென்று ஒதுக்கப்படும், ஓஎஸ்ஆர் நிலங்களை, பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த நோக்கத்துக்காக, இந்த நிலங்கள் ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுமக்களின் கோரிக்கை, மன்ற தீர்மானம் என்ற அடிப்படையில், இந்த நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற அனுமதி கோரும் முன்மொழிவுகள் நிராகரிக்கப்படுகின்றன.
முன்மொழிவுகள்: இருப்பினும், பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் இதற்கான முன்மொழிவுகளை மீண்டும் மீண்டும் அனுப்புகின்றன. இது, தேவையில்லாத குழப்பங்களுக்கு வழி வகுப்பதாக உள்ளது. எனவே, நகராட்சிகள், மாநகராட்சிகள் இது தொடர்பான முன்மொழிவுகளை அனுப்புவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications