வெள்ள தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி படுதோல்வி: தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு
சென்னை: சென்னையில் மழை, வெள்ள தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் மாநகராட்சி படுதோல்வி அடைந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரின் பல பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இன்னும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்நிலையில் மயிலாப்பூர் சித்திரைக்குளம் கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் மழை, வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சென்னை மாநகராட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பாதித்த மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் முறையாக சேரவில்லை. சென்னையில் வெள்ள சேதங்களை மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் நேரில் பார்வையிட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி மிகவும் சேதம் அடைந்திருப்பதை தமிழக அரசு உயர் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசிடம், மாநில அரசு கோரி உள்ளது. நிச்சயமாக தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications