நோயாளியிடம் ரூ.1.20 லட்சம் “அபேஸ்”- கோவை மருத்துவமனையில் திருடர்கள் கைவரிசை
கோவை: கோவை மருத்துவமனையில் நோயாளியிடம் ரூபாய் 1.20 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குமாரதாரா பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சிறுநீரகக் கல் அறுவை சிகிச்சைக்காக, கோவை, ராமநாதபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இவரது மனைவி உமாதேவி, சரவணகுமாருக்கு துணையாக இருந்து அவரை கவனித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை சரவணகுமாருக்கு மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதற்கான கட்டணத்தில் 30 ஆயிரம் ரூபாயை மட்டும் முன் பணமாக கட்டிவிட்டு, மீதம் 1.20 லட்சம் ரூபாயை தனது கைப்பையில் உமாதேவி வைத்திருந்தார்.
அத்துடன் முக்கால் பவுன் மோதிரம், ஒரு கிராம் தங்க டாலர் மற்றும் ஒரு வெள்ளி மோதிரமும் வைத்திருந்தார். திங்கள்கிழமை மாலை மருத்துவமனை அறையில் சரவணகுமார் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார்.
பணம் மற்றும் நகையுடன் இருந்த கைப்பையை கணவர் அருகே வைத்துவிட்டு அறையின் உள்ளே இருந்த கழிவறைக்கு சென்ற உமாதேவி திரும்பி வந்து பார்த்தபோது, அறையின் கதவு லேசாக திறந்திருந்தது. அவர் வைத்துவிட்டுச் சென்ற கைப்பை காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து உமாதேவி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள கோவை ராமநாதபுரம் போலீசார் கொள்ளையடித்துச் சென்ற நபர்களைப் பற்றிய விவரங்களை திரட்டி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications