தேர்தலை அமைதியாக நடத்த 1,400 பறக்கும் படைகள் தயார்: டி.ஜி.பி. அனுப் ஜெயிஸ்வால்!
சென்னை: தமிழகத்தில் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட 1,400 பறக்கும் படைகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் டி.ஜி.பி. அனுப்ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1400 பறக்கும் படைகள்
லோக்சபா தேர்தலுக்காக 1,400 பறக்கும் படைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.
பறக்கும் படை உள்ளிட்ட அமைப்புகளில் மாநில போலீசார், மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
நடத்தை விதிமுறைகள்
இவர்கள் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டுப்பாட்டு அறை
யாராவது தேர்தல் விதிமுறையை மீறி நடந்தால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மாவட்ட அளவில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகாரை அனுப்பலாம்.
புகார் தெரிவிக்க
சென்னையில் தேர்தல் டி.ஜி.பி. அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு, 044-28441707, 044-28441507, 044-28441807 என்ற தொலைபேசி எண்களிலும் பேசி புகார்களை பதிவு செய்யலாம்.
ஒத்துழைப்பு கொடுங்க
தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடந்திட, அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications