காஞ்சிபுரம்: பள்ளி மாணவர்கள் மோதல்… ப்ளஸ்1 மாணவன் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நடந்த மோதலில் ப்ளஸ் 1 மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த மாணவரின் பெயர் ஜானகி ராமன் என்பதாகும். இவர் கூலித்தொழிலாளி பாபு என்பவரின் மகனாவார். நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற மாணவன் ஜானகி ராமனுக்கும், சகமாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி அது கைகலப்பில் முடிந்தது. இதில் ஜானகிராமனை சக மாணவன் பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ஜானகிராமன் மயக்கமடைந்தான்.
இதனையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக ஜானகிராமனை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேல்சிகிச்சைக்காக மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் மாணவன் ஜானகி ராமன் உயிரிழந்தான்.
இதனையடுத்து ஜானகி ராமனை தாக்கிய மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாணவர் உயிரிழப்பை அடுத்து இன்று சுப்புராய முதலியார் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications