சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 10 சிறுவர்கள் தப்பியோட்டம்.. ஒருவன் சிக்கினான்.. மதுரையில்!
மதுரை: மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறையிலிருந்து 10 குற்றவாளிகள் நள்ளிரவில் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தப்பியோடிய 10 சிறுவர்களில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட சிறுவன் மதுரை பி.பி குளத்தைச் சேர்ந்தவன் என கூறப்படுகிறது. மேலும் 9 பேரை தெப்பக்குளம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அந்த சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட சிறுவன் மதுரை பி.பி குளத்தைச் சேர்ந்தவன் என கூறப்படுகிறது. மேலும் 9 பேரை தெப்பக்குளம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை காமராஜர் சாலையில் சிறுவர்களுக்கான சிறை உள்ளது. இதில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
குற்றவழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மதுரை, சிவகங்கை ஆகிய பகுதியை சேர்ந்த சவுந்தரராஜா, செல்வம், விக்னேஸ்வரன், கார்த்திக், பிச்சைமணி, ஆதிபரமேஸ்வரன், யாசின் முகமது, பாலாஜி, மணிகண்டன், தீபக்ராஜா ஆகிய 10 சிறுவர்கள், நேற்று நள்ளிரவில் ஜன்னல் கம்பியை வளைத்து அதன் வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
இரவு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஒரு சிறுவன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது சிறையில் இருந்து தப்பிய பி.பி.குளத்தை சேர்ந்த பழனியாண்டி மகன் தீபக்ராஜா என தெரியவந்தது.
அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற 9 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். ஒரே நேரத்தில் 10 சிறுவர்கள் சிறை ஜன்னலை வளைத்து தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சிறார் சிறையில் இருந்து சிறுவர்கள் தப்பித்து செல்வதும், பின்னர் அவர்களை போலீசார் பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதும் வாடிக்கையான ஒன்றாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட 5 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தப்பி ஓடியபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications