சென்னை அருகே குரங்கு கடித்து 2 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்
சென்னை: சென்னை தாம்பரம் அருகே குரங்கு கடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
தாம்பரத்திற்கு அருகேயுள்ளது செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட திருமலை நகர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிந்து மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. மேலும், வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள உணவுப்பொருள்களை எடுத்துச்சென்றும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் அவைகள் பயமுறுத்தியும் வருகின்றன.

இந்நிலையில் தெருவில் தனியாக வந்த குரங்கு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சனா (5), சிறுமி வாசுகி (13) உள்பட 10 பேரின் உடலில் பல்வேறு பகுதிகளில் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் 10 பேரும் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications