100/100 மார்க் கொடுப்பேன்.. 10 நாட்களாக விஜய்யின் செயல்பாடுகள் எப்படி? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வராக பதவியேற்றது முதல் விஜய்யின் செயல்பாடுகளுக்கு 100க்கு 100 மதிப்பெண் கொடுப்பேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம் என்று மக்களுக்கு தேவையானதை விஜய் முதலில் செய்திருப்பதாக கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று 10 நாட்களாகி இருக்கிறது. இந்த 10 நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடல், சிங்கப்பெண் திட்டம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி இருக்கிறார். விஜய்யின் 10 நாள் செயல்பாடுகள் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

Vijay

அதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, முதல்வராக பொறுப்பேற்ற பின் தனக்கான குழுவை விஜய் அமைத்து கொண்டார். அந்த டீமிடம் தான் எந்தெந்த துறைகளுக்கு எப்படியான அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்று விஜய் கூறுவார். அதற்கேற்ப அந்த குழு ஒரு பட்டியல் தயார் செய்யப்படும். அதனை விஜய் பார்த்து உத்தரவிடுவார். திறமை, நேர்மை ஆகியவற்றை பார்த்துதான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த கட்சிக்கு வேண்டியவர், அந்தக் கட்சிக்கு வேண்டியவர் என்று சிலரை பிராண்ட் செய்வார்கள். எந்த அதிகாரியும் அப்படி செயல்பட மாட்டார். ஆனால் சிலர் மீது அந்த பிராண்ட் விழுந்துவிடும். இதனால் அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். அதுபோன்ற சம்பவம் தவெக ஆட்சியில் நடக்கவில்லை. அரசியல் சார்பு இல்லாமல் விஜய் அதிகாரிகளை தேர்வு செய்து வருகிறார்.

அதேபோல் விஜய் கோட் சூட் அணிவது ஒரு நவீன மற்றும் கார்ப்பரேட் பாணி செயல்பாட்டின் அறிகுறியாகும். இந்த ஆடை முறை ஒரு தீவிரமான, தொழில்முறை அணுகுமுறையைக் காட்டுகிறது. முதலமைச்சரைப் பின்பற்றி, தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைச் செயலாளர்கள், அதிகாரிகள் அதிகாரப்பூர்வ கூட்டங்களின் போது 'பிளேஸர்' போன்ற ஃபார்மல் உடைகளை அணிவதை ஒரு விதியாகவே கொண்டு வரலாம்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்ற விஜய்யின் அதிரடி உத்தரவு 100% பாராட்டுக்குரியது. மக்கள் நலனுக்கு அவர் கொடுத்துள்ள இந்த முன்னுரிமைக்காக, கடந்த 10 நாள் ஆட்சியை மதிப்பிட்டு சிஎம் விஜய்க்கு நான் 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+