வேகம் எடுக்கும் 11 வகையான வைரஸ் காய்ச்சல்! இன்ஃபுளூயன்சா, டெங்கு அலர்ட் மக்களே
தமிழ்நாடு: மழைக்காலம் பரவலாக தொடங்கி இருப்பதால், 11 வகையான வைரஸ் காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி இரண்டு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பருவ மழைக் காலம் தொடங்கி இருப்பதால், பல மாவட்டங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. டெங்கு உட்பட 11 வகையான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது. இன்ஃபுளூயன்சா, வைரல் ஃபீவர் போன்ற பல காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

சாதாரணமாக உடல் வலிபோல தொடங்கும் இந்தக் காய்ச்சல் சில மணிநேரங்களில் ஆளை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போடும் அளவுக்கு தீவிர தன்மை அடைந்துவிடுகிறது. எனவே உடல் சோர்வு அல்லது மூட்டு, கை கால் வலி வருவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
சாதாரண காய்ச்சல் என மருந்துக் கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு, அலட்சியமாக இருப்பது பல ஆபத்துகளை உருவாக்கலாம். டெங்கு போன்ற காய்ச்சல்களின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். சிலருக்குக் காய்ச்சல் அதிகம் இல்லாமல் உடல் சோர்வு மட்டுமே கூட வரலாம். அதுவும் டெங்கு அறிகுறியாக இருக்கலாம். மருந்துக் கடைகளில் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, கவனக் குறைவாக இருப்பது மிகமிக ஆபத்தானது. காரணம், சில மணிநேரங்களிலேயே முழு உடல் செயல்படமுடியாத அளவுக்கு முடக்கப்பட்டுவிட்டும். ரத்த அணுக்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைய ஆரம்பித்துவிடும்.
சருமத்தில் ஏதோ ஒருவிதமான எரிச்சல் உணர்வு, தலைவலி, உடல்வலி, நெஞ்சு பாரம் ஆகிய எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரை ஆரம்ப நிலையிலேயே அணுகுவது நல்லது. சகட்டு மேனிக்குப் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பற்றி பேசிய டாக்டர் ஜே.கே.ரெட்டி, "பல காலமாகவே இந்த மாதிரியான வைரஸ் காய்ச்சல்கள் இருக்கின்றன. இப்போது நாம் பரிசோதனை மூலம் மிகத் தெளிவாக என்ன வகையான காய்ச்சல் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறோம். அதற்காக நவீன பரிசோதனைகள் வந்துவிட்டன.
இந்தப் பருவ கால காய்ச்சல்கள் 90% குணபடுத்தக் கூடியவைதான். ஆகவே, மக்கள் பயம் கொள்ளக் கூடாது. இந்த வைரல் காய்ச்சல்கள்தான் தொற்றும் குணம் கொண்டவை. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது.

டெங்கு அப்படியல்ல. கொசுவினால் வரக்கூடியது. மழைக் காலம் தொடங்கிப் பல இடங்களில் நீர் தேங்கி இருக்கிறது. அதில் கொசு உற்பத்தியாக வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவருக்குக் காய்ச்சல் வந்ததால் உடனடியாக அது என்ன வகையானது என்பதைக் கண்டறிய வேண்டும்.
மருத்துவரைப் பார்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுகளில் சரியான கவனம் செலுத்துவது, வீட்டிலிருந்தபடியே தற்காத்துக் கொள்வது எப்படி? என்பதை அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஹைட்ரேஷன் முக்கியம். சரியான அளவில் பாராசிட்டமின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்ஃபுளூயன்சா வைரஸ் ஒரு பொதுவானதுதான். இது கொரோனா மாதிரி பரவக்கூடிய வைரஸ்தான். வெளிநாடுகளில் கூட ஆண்டுக்கு ஒருமுறை புளூ வைரஸ்க்கு என தனித் தடுப்பூசி போடுகிறார்கள். இந்த வைரஸ் குழந்தைகளைத் தாக்கினால், நிமோனியா வர வாய்ப்பு உள்ளது. சுவாச பிரச்சினைகள் உண்டாகலாம். பெரியவர்களுக்கு உடல் வலி இருக்கும். சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படலாம்" என்கிறார்
மேலும் இது பற்றி டாக்டர் அஸ்வின் விஜய் சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர், "H3N2 இன்ஃபுளூயன்சா வைரஸ் காய்ச்சல் வந்தால், ஒரு வாரம் முதல் 3 வாரங்கள் வரை தொடர்ந்து நீடிக்கலாம். அதன் பாதிப்பு தொடர்ந்து காணப்படும். அச்சப்படும் அளவுக்கு உயிர்க்கொல்லி அல்ல. இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது நல்லது. ஏனென்றால், பாதிப்பு என்பது அதிகம் உள்ளது.
காய்ச்சல் நிறைய நாட்கள் நீடிக்கிறது. சளி தொந்தரவும், தொண்டை வலியும் கூட சில நாட்கள் நீடிக்கலாம். பாராசிட்டமால் எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் சி மாத்திரைகள் சாப்பிடுவது நல்லது. நிறையப் பழங்களைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள் நிறையச் சாப்பிடவேண்டும்" என்கிறார்
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications