53 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடாத 11 கிராமங்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 11 கிராமங்களில் கடந்த 53 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையே கொண்டாடப்படவில்லை.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த மாம்பட்டி ஊராட்சி மக்கள் கடந்த 53 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் புறக்கணித்து வருகிறார்கள்.

விவசாயத்தை நம்பி இருக்கும் மயில்ராயன்கோட்டை என்று அழைக்கப்படும் எஸ்.மாம்பட்டியில் 3,500 பேர் வசிக்கிறார்கள். இந்த ஊராட்சிக்குட்பட்டது ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, சத்திரப்பட்டி, எம்.வலையப்பட்டி, கிளுகிளுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, கச்சப்பட்டி, தோப்புப்பட்டி, இந்திராநகர், கலிங்குபட்டி.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்கின்றனர். மேலும் கால்நடை வளர்த்து வருகின்றனர். விவசாயம் துவங்கும் நேரத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. இதனால் மக்களின் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு உள்ளது. இதையடுத்து மாம்பட்டியின் அப்போதைய அம்பலக்காரர் சேவுகன் அம்பலம் முன்னாள் அம்பலக்காரர்களோடு ஆலோசித்தார்.
இதையடுத்து 1959ம் ஆண்டில் கூட்டம் கூட்டி மாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட முடிவை அடுத்து இந்நாள் வரை அந்த 11 கிராம மக்களும் தீபாவளி கொண்டாடாமலேயே உள்ளனர்.
இந்த கிராமங்களில் உள்ள மரம், செடி, கொடிகளை காக்க வேண்டி வெள்ளாடு வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications