வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: 12 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்!
காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான பனிமூட்டம் நிலவி வரகிறது. பகல் நேரங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
இரவு நேரங்களில் கடுமையான குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.

நேற்று முதல் மழை
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.

சென்னையில் நள்ளிரவில் மழை
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்தது. இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம், வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்திலும் மழை பெய்தது.

மதுரையில் லேசான மழை
இதேபோல் கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. மதுரையிலும் நேற்று இரவு லேசான மழை பெய்தது.

பெரும்பாலான மாவட்டங்களில்
மதுரை மாவட்டம் மேலூர், கொட்டாம்பட்டி, கீழையூர், வெள்ளரிப்பட்டியிலும், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை, திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

மழையால் மக்கள் மகிழ்ச்சி
வடகிழக்கு பருவமழை முறையாக பெய்யாத நிலையில் தற்போதே பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தொடங்கிவிட்டது. இந்நிலையில் இந்த திடீர் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிதமான மழை பதிவு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12 மாவட்டங்களில் மழை பெய்யும்
சென்னை, கோவை, நெல்லை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications